Share on Social Media


சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் ஏறத்தாழ 38 முஸ்லிம் கைதிகள் 22 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை தண்டனை காலத்தை கழித்துள்ளார்கள். தங்களது சிறு வயது பிள்ளைகளை பிரிந்து சிறைக்கு வந்தவர்கள், இன்றைக்கு அந்த பிள்ளைகளின் திருமணம் முடிந்த பின்னரும் தொடர்ந்து சிறைச்சாலையில் உடல் ரீதியான பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர்.கேரளா, ஆந்திராவில் 7 ஆண்டு சிறைத் தண்டனை முடித்தவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். முஸ்லிம் சிறைவாசிகள் அரசு நிர்ணயித்த விடுதலைக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர்கள். இவர்களின் விடுதலை கோரிக்கை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கோரிக்கையாகும். இந்த விவகாரத்தில் மிகவும் கனிவுடன் கருணைப் பார்வையுடன் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலையை சாத்தியமாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *