Share on Social Media

5 ஆண்டு நேஷனல் சேவிங் சர்ட்டிபிகேட் திட்டத்துக்கான வட்டி விகிதம் – 6.8%
பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்துக்கான வட்டி விகிதம் – 7.1%
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கான வட்டி விகிதம் – 6.9% (124 மாதங்களில் முதிர்ச்சி அடையக் கூடியது.)
சுகன்யா சம்ருதி யோஜனா திட்டத்துக்கான வட்டி விகிதம் – 7.6%

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும் அறிவிப்பைக் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று வெளியிட்டது மத்திய அரசாங்கம். ஆனால், கடந்த ஏப்ரலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வட்டியைக் குறைத்தால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்று நினைத்த மத்திய அரசாங்கம் வட்டி விகிதத்தைக் குறைக்கும் அறிவிப்பை உடனே வாபஸ் வாங்கியது.

இந்நிலையில், இந்த காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக மக்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளதால், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டியை இப்போது குறைப்பது சரியாக இருக்காது என்பதால், ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த வட்டி விகிதமே தொடர்ந்து அளிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதைக் கண்டு நடுத்தர வர்க்கத்து மக்கள் நிம்மதி அடையலாம்.
ஆனால், மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *