Share on Social Media


போதைப்பொருளை வாங்க நினைத்தவன் கையில் பணமில்லை. ஒருநாள் பயன்பாட்டுக்கு போதைப்பொருள் வாங்குவதற்குத் தேவைப்படும் 5,000 ரூபாய்க்காக மீண்டும் ஒரு கொலை செய்கிறான் அந்தச் சிறுவன். கொலை செய்யும் நோக்கம் அந்தச் சிறுவனுக்குக் கிடையாது. ஆனால் போதைப்பொருள் ஏற்படுத்திய அடிமைத்தனத்தின் விளைவாகவே இதைச் செய்கிறான்.

மீண்டும் திஹார் ஜெயில், சிறுவர் நீதி வாரியம்… மீண்டும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை. இந்த முறையும் இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு வெளியே செல்கிறான் அந்தச் சிறுவன். வெளியேற சென்றதும் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு, கையில் பணமில்லை, மூன்றாவது கொலையைச் செய்கிறான். மறுபடியும் ஜெயில், சிறுவர் நீதி வாரியத்துக்குச் சென்று மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவனைச் சந்தித்தேன்.

Drugs (Representational Image)

Drugs (Representational Image)
Photo by MART PRODUCTION from Pexels

ஒரு குற்றம் செய்துவிட்டு ஒரு மனிதன் திருந்தவில்லை என்ற கோணத்தில் இதை அணுக முடியாது. போதைப்பொருளின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவு அது. ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து விடுபட்டு ஓராண்டு கழிந்த நிலையில், என்றாவது ஒருநாள் அதை எடுத்தால்கூட மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுவார்கள். போதைப்பொருளுக்கு அடிமையாவது தனிநபரின் வாழ்வை சீரழிப்பதோடு, குடும்பம், வீடு, நாடு என அனைத்தையும் சிதைத்துவிடும். எனவே, நண்பர்களுடன் இருக்கும்போது ஒரு ஃபன்னுக்காகவோ, அது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவோகூட போதைப்பொருளை முயன்று பார்க்கக்கூடாது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்ட போதை மருந்துகளை விற்பனை செய்வது, வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது… இரண்டுக்கும் என்ன தண்டனை? அடுத்த அத்தியாயத்தில்..!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *