Elavenil Valarivan M 2 Tamil News Spot
Share on Social Media

புதுடில்லி: இந்தியாவின் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்கள் விருது இளவேனில், பஜ்ரங் புனியாவுக்கு வழங்கப்பட்டது. 

‘எப்.ஐ.சி.சி.ஐ.,’ சார்பில் 2019–2020ல் சிறப்பாக செயல்பட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் விருது வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக ‘ஆன்லைன்’ வழியாக நடந்தது. கடந்த ஆண்டு தங்கள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இளம் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை, தமிழகத்தின் இளவேனில் தேர்வு செய்யப்பட்டனர். 

இளவேனில் கூறுகையில்,‘‘இவ்விருது பெற்றதற்கு முதலில் குடும்பத்தினருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தான் எப்போதும் என்னை உற்சாகப்படுத்துகின்றனர். தவிர ஆலோசகர் ககன் நரங், என் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் எனது பயிற்சியாளர் நேகா சவுகானுக்கும் நன்றி,’’ என்றார். 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *