Share on Social Media

மெல்போர்ன்: ‘‘ஆஸ்திரேலிய ‘டுவென்டி–20’ அணிக்கு தோனி, ஹர்திக் பாண்ட்யா போன்ற சிறந்த ‘பினிஷர்’ தேவை,’’ என, பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் 50 ஓவர் உலக கோப்பையில் 5 முறை (1987, 1999, 2003, 2007, 2015) சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. கடந்த 2010ல் பைனல் வரை சென்றிருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை நடக்கவுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியது: ஆஸ்திரேலிய ‘டுவென்டி–20’ அணிக்கான ‘பேட்டிங்’ வரிசையில் வருத்தமளிக்கக்கூடிய இடம் பின்வரிசை தான். ஏனெனில் கடைசி 3 அல்லது 4 ஓவரில், 50 ரன் எடுக்கக் கூடிய வீரர் இல்லாதது பின்னடைவு. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தன் கிரிக்கெட் வாழ்நாள் முழுவதும் பின்வரிசையில் களமிறங்கினார். இவர், சிறந்த ‘பினிஷர்’ என்பதை மறுக்க முடியாது. இதேபோல ஹர்திக் பாண்ட்யா, விண்டீசின் போலார்டு பின்வரிசையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை போன்ற சிறந்த ‘பினிஷர்’ ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் ‘பினிஷர்’ இல்லாமல் போனதற்கு, ‘பிக் பாஷ் லீக்’ தொடரில் முன்னணி பேட்ஸ்மேன்கள் ‘டாப்–ஆர்டரில்’ மட்டுமே களமிறங்குகின்றனர். மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், ஸ்டாய்னிஸ் போன்றவர்களை சிறந்த ‘பினிஷர்’களாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு பாண்டிங் கூறினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *