Share on Social Media


“போரால் உயிரிழந்தவர்களைவிட நோயால் உயிரிழந்தவர்கள்தான் அதிகம்” என்பார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இது சாதாரண பழமொழி என்று கடந்து போய்விட முடியாது. வரலாற்று நெடுகிலும் நடந்த கோர சம்பவங்களை உற்றுநோக்கினால் இதில் பற்றிப்படர்ந்திருக்கும் நிதர்சனத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதுவரையில் நெப்போலியன், அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான், ராஜேந்திர சோழன் போன்ற மாவீர மன்னர்களின் படையெடுப்புகளையும், அவர்கள் ஆட்சிசெய்த நிலப்பரப்புகள், வீரம், கொடை, அறம் பற்றிதான் வரலாற்றுப் பாடங்கள் நமக்கு கற்பித்திருக்கின்றன.

ஆனால், நம் கண்ணில்படாத கொடூர கிருமிகள் பல, இனம் மொழி, மதம், நிறம், நாடு, கண்டம் என எந்தப் பேதங்களுமின்றி பேயாட்சி நடத்தியதை நாம் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பிளேக், காலரா, ஃப்ளு, கொரோனா போன்ற கொடூர நோய்கள்தான் அவை. குறுநில மன்னர்களாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆட்சி செய்யும் கிருமிகளை எபிடெமிக் (Epidemic) என்றும், கண்டங்கள் கடந்து போர்த்தொடுத்து தனது ஆட்சியை நிறுவும் கிருமிகளின் பரவலை பேண்டெமிக் (Pandemic – பெருந்தொற்று) என்றும் கூறுகிறது மருத்துவ உலகம். கொரோனா ஒரு பேண்டெமிக்.

கொரோனா மரணம்

கொரோனா மரணம்

கொரோனா தற்போது இந்த உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைப்பதையும், துடிக்கத் துடிக்க கோடிக்கணக்கான உயிர்களைக் குடித்து வருவதையும் கனத்த மனதோடு கண்முன்னே காண்கிறோம். இதேபோலத்தான் நம் முன்னோர்களும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல நோய்களை எதிர்கொண்டும், அதனால் உயிர்துறந்தும் வந்தார்கள்!

இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் கொரோனா நோய்த்தொற்றைப் போலவே, வரலாறு நெடுகிலும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் வெவ்வேறு வகையான நோய்க்கிருமிகள் அலை அலையாய் தொடர்ந்து வந்து இப்போது போலவே அப்போதும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தன நம் மானுட சமுதாயத்தை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *