Share on Social Media


“தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’னு ஒரு படம் எடுத்துருக்கார். அதை விநியோகம் செய்த வகையில், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கு. அந்த நஷ்டத்தை மைக்கேல் ராயப்பன்தான் தரவேண்டும். ஆனால், அதில் நடித்த சிலம்பரசன்தான் தரவேண்டுமென்று கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்கள். சிலம்பரசன் படம் ஆரம்பிக்கும் போதும் சரி, அதை முடிக்கும்போதும் சரி மிகவும் பிரச்னை தர்றாங்க… தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவின் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் பல கோடிகளை பெற்றுக் கொண்ட பின்புதான் படத்துல நடிக்க அனுமதிக்கிறாங்க.

டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர்

டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர்

அதைப் போல படம் வெளியிடுற போது ‘ரெட்’ என்கிற பெயரில் பல கோடிதரவேண்டும் என்று எங்களை மிரட்டுகிறாங்க. தமிழ்நாட்டுல சுதந்திரமா வாழ முடியல. தொழிலை மிரட்டுறாங்க. இப்போது புதிதாக அருள்பதி என்பவர் நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற சங்கத்தை வைத்து, அதில் பல விநியோகஸ்தர்களை வைத்துக் கொண்டு ‘சிலம்பரசனின் எந்தப் படத்தையும் நாங்க ரிலீஸ் பண்ண விடமாட்டோம்’னு கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க. தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ண விடமாடோம்னு சொல்றாங்க.

இதுக்கு பக்கபலமா எங்களுக்கு அரசாங்கம் இருக்கிறது என்கிற ஒரு மாயையும் உருவாக்கி, இந்த மாதிரியான காரியங்கள்ல ஈடுபடுறாங்க. இது மாயையே தவிர, இன்றைய அரசாங்கம் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கு. அதற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இவர்களோட செயல்பாடுகள் இருக்கு. இதை முதல்வரின் பார்வைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்ல அவருடைய வீட்டு வாசலிலும் உண்ணாவிரதம் இருப்பதற்குக் கூட நான் தயாரா இருக்கிறேன். கமிஷன் அலுவலகத்திலும் புகார் கொடுத்துருக்கோம். அது நல்லபடியா நடக்கும்னு நம்புறோம்” என்றார் உஷா ராஜேந்தர்.

இந்தப் பேட்டியை விரிவாக வீடியோ வடிவில் காண…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *