Share on Social Media


நேற்று காலை திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 59.

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

விவேக்கின் மரணச்செய்தி வெளியானதும் பல்வேறு திரைநட்சத்திரங்கள் கண்ணீரோடு அவருக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

”விவேக் பிரிந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. பல தசாப்தங்களாக மக்களை மகிழ்ச்சிப்படுத்தியவர். அவரின் புகழ் என்றும் மக்களிடத்தில் நிலைத்திருக்கும்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

”சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட விவேக் அவர்களின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர்” என இயக்குநர், நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிறார்.

”அன்புதம்பி விவேக்கின் மறைவு என்கிற வார்த்தையை பயன்படுத்தவே கஷ்டமாகயிருக்கிறது. வார்த்தைகளால் அவரது குடும்பத்துக்கோ, ரசிகர்களுக்கோ ஆறுதல் சொல்வது என்பது இயலாத காரியம்” என்று நடிகர் சத்யராஜ் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இன்று சினிமா தொடர்பாக நடைபெறயிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் நடிகர் விவேக்கின் மறைவில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *