Share on Social Media

அழுத்தமான தருணங்களில் கூட நிதானத்தை இழக்காமல் ஆடுவது சிந்துவின் பலம். இரண்டாவது செட்டில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார் தாய் சூ யிங். 

முதல் செட்டில் பரபர ஆட்டம்… 18-18 என சிந்து – தாய் சூ யங் கடும் போட்டி

இன்-அவுட் பார்ப்பதில் சிந்து கில்லாடி. அதனால் இந்த முறையில் அவருக்கு அதிக புள்ளிகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

முதல் செட்டில் சிந்து – தாய் சூ யிங் இருவரும் தலா 14 புள்ளிகளுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

கம்பேக் கொடுக்கும் தாய் சூ யிங்… 11-11 என ஆட்டத்தில் அனல் பறக்கிறது!

டோக்கியோவில் இதுவரைக்கும் ஆடியிருக்கும் நான்கு போட்டிகளிலுமே சிந்து ஒரு செட்டில் கூட எதிராளிகளால் வீழ்த்தப்படவில்லை.

சிந்து

சூப்பர் ஃபார்மில் சிந்து… 8-4 என லீட் எடுத்து முன்னிலை

அதிரடியாகவும், அதிக கவனத்தோடும் ஆடும் சிந்து 4-2 என லீட் எடுத்திருக்கிறார்.

ஆட்டம் தொடங்கியது… 2 பாயின்ட் லீட் எடுத்தார் தாய்-சூ-யிங்

சிந்துவுக்கும் தாய்-சூ-யிங்குக்கும் இடையேயான போட்டிகளில் தாய்-சூ-வே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். இருவரும் மோதிக்கொண்ட போட்டிகளில் தாய்-சூ-யிங் 18 முறை வென்றிருக்கிறார். சிந்து 5 முறை மட்டுமே வென்றிருக்கிறார்.

சில்வர் சிந்து என விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், தேசத்தின் பெருமையை உயர்த்தவும் சிந்துவுக்கு இந்த போட்டி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தாய்-சூ-யிங்குக்கும் இந்த போட்டி முக்கியமே. உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தாலும் பெரிய தொடர்களில் சொதப்பிவிடுவார் என்கிற விமர்சனம் அவர் மீது உண்டு.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *