Share on Social Media


பெங்களூரு : கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு, 72, நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளார்.கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, நேற்று முன்தினம் மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த பின், லேசான காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, தனது அனைத்து நிகழ்ச்சியையும் ரத்து செய்து, ஓய்வில் உள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *