Share on Social Media


பாகல்கோட் : ”எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, நாளுக்கொரு விதமாக பேசி, ‘நானே அடுத்த முதல்வர்’ என கூறி வருகிறார்,” என, துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.

பாகல்கோட்டில் அவர் நேற்று கூறியதாவது:நாட்டில் காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் எடியூரப்பாவை பற்றி, தேவையின்றி பேசுவதை சித்தராமையா நிறுத்த வேண்டும்.கொரோனா நெருக்கடி சூழ்ந்துள்ள நிலையில் அரசை விமர்சிப்பதை விட்டு, சிறந்த ஆலோசனையை அவர் கூறட்டும். அதை நாங்கள் வரவேற்போம்.சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டுமென பரிதவிக்கிறார். நாளுக்கொரு விதமாக பேசி, ‘நானே அடுத்த முதல்வர்’ என, தம்பட்டம் அடிக்கிறார். இத்தகைய பேச்சுகளை அவர் நிறுத்துவது நல்லது.மாநிலத்தில் முதல்வர் மாற்றம் என்பது வெறும் வதந்தி.எடியூரப்பா தலைமையிலான அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியை சிறப்பாக செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *