Share on Social Media


பெங்களூரு : பெங்களூரு நகரில், 12 அதிவிரைவு சாலைகள் மேம்படுத்த, 477 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய கர்நாடகா அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:l பிரதமர் சுயசார்பு திட்டத்தின் கீழ், ‘ஒரு மாவட்டம், ஒரு பயிர்’ திட்டத்துக்கு கர்நாடகா அரசு ஒப்புகொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பயிர்கள் விளைவிக்க விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இதற்காக, 493 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளோம் l மத்திய அரசு, 60 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீதம் நிதி வழங்கும். சிறிய உணவு பொருட்கள் தயாரிப்போருக்கு உதவியாக இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு இத்திட்டத்தை ஒப்புகொண்டுள்ளோம்l

மங்களூரு மீனவ துறைமுகத்தின், மூன்றாம் கட்ட பணிகளுக்கு, 22 கோடி ரூபாய் ஒதுக்க அனுமதி l என்.ஜி.இ.எப்., தொழிற்சாலை, ஜெர்மனியை சேர்ந்த இ.எச்.ஜி., நிறுவனத்துடன், 50 ஆண்டுகளாக உடன்படிக்கை செய்து கொண்டிருந்தது. அந்நிறுவனத்தின், 9.7 சதவீத பங்குகள் உள்ளன. அவர்களின், 61.98 கோடி ரூபாய் பங்கு வழங்கினால், அந்த பங்கை, கர்நாடகா அரசே வாங்கிகொள்ள முடிவு செய்யப்பட்டதுl கர்நாடகா சிவில் சர்வீசஸ் விதிகளில், ஊழியர்கள் தேர்வில், நேர்காணலில், ஐந்து சதவீதம் மதிப்பெண்ணுக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளதுl கட்டாயமாக இருந்த ஆசிரியர்கள் இட மாற்றத்தில், ஒரு முறை மட்டுமே இடம் மாற்றம் செய்யும் வகையில் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

மாண்டியாவில், 25 ஏக்கர் நிலம், ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு, மருத்துவமனை கட்டுவதற்கு வழங்கப்படுகிறதுl பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவில் உள்ள சூர்யாநகருக்கு காவிரி குடிநீர் வினியோகிப்பது தொடர்பாக, துணை கமிட்டி அமைக்கப் பட்டுள்ளதுl பெங்களூரு நகரில், 12 அதிவிரைவு சாலைகள் மேம்படுத்த, 477 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *