Share on Social Media


நாளொரு இழப்பு என்கிறவகையில் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவி கோரத்தாண்டம் ஆடியது. குறிப்பாக சினிமாத்துறையில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மரணித்தார்கள். அதில் ஒருவர்தான் நம்மையெல்லாம் திரையில் மகிழ்வித்த நடிகர் மாறன்.

ஏராளமான படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ‘கில்லி’ படத்தில் அவர் நடித்த ஆதிவாசி என்ற கேரக்டர் மக்களுக்கு அவரை பிரபலப்படுத்தியது. அதன் பிறகு, ‘டிஷ்யூம்’, ‘தலைநகரம்’, ‘வேட்டைக்காரன்’, ‘காலா’ எனப் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார் மாறன்.

இப்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘சார்பட்டா’ படத்தில் ‘மஞ்சா கண்னன்’ எனும் முக்கியமான கேரகடரில் நடித்திருந்தார் மாறன். இந்தப் படம் அவருக்கு நல்லப் பெயரை வாங்கித் தரும், இதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என நம்பிக்கையுடன் காத்திருந்த மாறனை கொரோனா பலிகொண்டது. கடந்த மே மாதம் கொரோனாவால் உயிரிழந்தார் மாறன்.

மாறனின் மனைவி கிளாரா – மகள் நிவியா

செங்கல்பட்டில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு சென்று அவரின் மனைவி கிளாரா மற்றும் அவரது மகள் நிவியாவை சந்தித்தோம். எப்போதும் சினிமா, பாட்டு என கலகலவென இருந்த அவரது வீட்டில் இப்போது பேரமைதி நிலவுகிறது. என்றாவது ஒருநாள் சினிமாவில் ஜெயித்துவிடுவோம் என்று சொல்லிக்கொண்டு அதற்கான ஓட்டத்தில் இருந்துகொண்டே இருந்திருக்கிறார், மாறன். மாறனை பற்றி நிறைய விஷயங்கள் கிளாராவும், நிவியாவும் பகிர்ந்துகொண்டனர். அதை இந்த வீடியோவில் காணலாம்…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *