Share on Social Media

1983-ம் ஆண்டு பிரகாஷ் படுகோனுக்கு அடுத்ததாக சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2019) பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இவர்தான். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியில் 1992-ம் ஆண்டு பிறந்தவர் இவர்.

தனது கரியரின் முதல் பெரிய வெற்றியை 2013 தாய்லாந்து ஓப்பனில் பெற்றார் சாய். அத்தொடரின் முதல் சுற்றில் 2003 ‘ஆல் இங்கிலாந்து’ சாம்பியனான மலேசியாவின் முகமது ஹபீஸ் ஹஷிமை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் பெற்றார். மேலும் அதே ஆண்டில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற வீரரான தௌஃபீக் ஹிதாயத்தை அவர் சொந்த மண்ணில் வைத்து தோற்கடித்தார். தௌஃபீக்கின் கடைசி தொடரான இந்தோனேஷிய ஓப்பனின் முதல் சுற்றிலேயே அவரை வீழ்த்தினார் சாய். அதற்கடுத்த சில நாட்களிலேயே அப்போதைய நம்பர்- 4 வீரரான ஹாங்காங்கை சேர்ந்த ஹு யுன்னை சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் தொடரில் வீழ்த்தினார்.

2016-ம் ஆண்டு இங்கிலாந்து சூப்பர் சீரிஸில் உலகின் நம்பர்-2 வீரரான மலேசியாவை சேர்ந்த லீ சாங் வேய்யை வீழ்த்திய சாய். அதே வருடம் கனடாவில் தனது முதல் கிராண்ட் ப்ரீ கோப்பையை முத்தமிட்டார். அதற்கடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஓப்பன் சூப்பர் சீரிஸின் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த் கிடம்பியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் சீரிஸ் பட்டத்தையும் வென்றார். சாய்னா, ஸ்ரீகாந்த், சிந்து ஆகியோருக்கு பிறகு இப்பட்டத்தை வென்ற நான்காவது இந்தியர் சாய் ப்ரனீத்.

Sai Praneet

2010 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2016 தெற்காசிய போட்டிகளின் அணி பிரிவில் தங்கம், 2016 மற்றும் 2020 ஆசிய சாம்பியன்ஷிப்பின் அணி பிரிவில் வெண்கலம், 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் ஆகியவை சாய் பிரனீத் பெற்ற மிக முக்கிய வெற்றிகள்.

தனது முதல் ஒலிம்பிக் போட்டிக்காக ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி மைதானத்தில் கோபிசந்த் மற்றும் அகஸ்ட்வோ, சான்டோசோ ஆகியோரின் கீழ் தீவிரமாக பயிற்சி பெற்றார் சாய். ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக வீரர்களுக்கு வார்ம்-அப்பாக அமையும் தொடர்கள் அனைத்தும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்களின் பயிற்சியும் பாதிப்படைய ”இச்சூழல் அனைத்து வீரர்களுக்கும் மிக சவாலான காலக்கட்டம். ஆனால் நான் அனைத்து சவால்களையும் சந்திக்கத் தயாராகவே உள்ளேன்” என நம்பிக்கையாகப் பேசினார்.

அந்த நம்பிக்கை நிச்சயம் ப்ரனீத்தை பதக்கம் வெல்ல வைக்கும்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *