Share on Social Media

அவர்கள் தங்கள் கடை / அலுவலகம் இனிமையாகக் காட்சி தர வேண்டும் என்று விரும்புவதால், நம் சொத்தை நல்லபடியாகப் பராமரிக்கவும் செய்வார்கள். வீட்டின் மதிப்பைவிட வணிகச் சொத்துகளின் மதிப்பை எடை போட்டு வாங்குதல் எளிது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. இடம்:

வணிகச் சொத்து அமைந்திருக்கும் ஏரியா எல்லோரும் எளிதில் வந்து கடை போடுகிற மாதிரி, வணிக நிறுவனங்களை அமைக்கிற மாதிரி இருக்க வேண்டும். அப்போதுதான் பலரும் எளிதில் வருவார்கள்; வருவோரும் நிலைத்திருப்பார்கள்.

2. அதிகத் தரம்:

கட்டடமும் சுற்றுப்புறங்களும் அதிகத் தரம் வாய்ந்தவையாக இருந்தால், அதிக வாடகை வரும். மிகப் பெரிய கட்டடங்கள் எனில், லாபி, லிஃப்ட் போன்றவை நல்ல நீள, அகலத்துடன் இருந்து, கட்டடமும் எடுப்பாக இருந்தால், நல்ல வாடகை பெறலாம். இவற்றை விற்பதும் எளிது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

3. நல்ல வாடகைதாரர்கள்:

வரும் வாடகைதாரர்கள் தரமானவர்களாக இருந்தால், 10 – 12 மாத வாடகை டெபாசிட்டாகக் கிடைக்கும்; மாத வாடகையும் சரியான நேரத்தில் கிடைக்கும். கட்டடத்தின் உள்ளலங்காரப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வாடகைதாரர்கள் அதிக காலம் நீடிப்பார்கள்.

“வீடுகளைவிட வணிகச் சொத்துகள் விலை உயர்ந்தவை. ஆகவே, சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு இவை எட்டாக்கனி” என்றிருந்த காலம் மாறிவிட்டது; காரணம், ஆர்.இ.ஐ.டி (REIT, சுருக்கமாக ரெய்ட்) – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட். இது ஒரு புதிய முதலீட்டு வழி. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்பாகச் செயல்படும் இது, ஏறக்குறைய ஒரு மியூச்சுவல் ஃபண்டுதான்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *