Share on Social Media

பத்தாவது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1932) நடந்தது. இதில் 37 நாடுகளை சேர்ந்த 1332 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்க, வெற்றி மேடை முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் தங்குவதற்கு ஒலிம்பிக் கிராமம் தனியாக கட்டப்பட்டது.

ஹாக்கியில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா என, மூன்று நாடுகள் மட்டும் பங்கேற்றன. முதல் போட்டியில் இந்திய அணி 11–1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. அடுத்து 24–1 என, அமெரிக்காவை தோற்கடித்து சாதனை படைத்தது. இதில் தயான்சந்த் 8, அவரது சகோதரர் ரூப் சிங் 10 கோல் அடித்தனர். இத்தொடரில் இந்தியா அடித்த 35 கோல்களில் தயான்சந்த், ரூப் சிங் சகோதரர்கள் மட்டும் 25 கோல் அடித்தனர். இவர்களது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க இந்தியாவுக்கு மீண்டும் தங்கப் பதக்கம் கிடைத்தது. வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே ஜப்பான், அமெரிக்கா கைப்பற்றின.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *