Share on Social Media


மதுரை : மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் ‘ஸ்பீக் டூ அஸ்’ மனநல ஹெல்ப் தரவுகளை சேகரிக்கும் கிளவுட் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான துவக்கவிழா மதுரையில் நடந்தது.

அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமசுப்ரமணியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,” கவுன்சிலிங் குறித்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் போது அவர்களது கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வேறு பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணமுடியும். மாதந்தோறும் எவ்வளவு பேர் கவுன்சிலிங் பெற்றனர் என்பது குறித்த ஆய்வையும் ‘கிளவுட்’ மூலம் தானாக சேகரிக்கமுடியும்” என்றார்.தமிழகத்தில் மனநல ஆலோசனை யாரிடம் எங்கு பெறுவது என்பது குறித்த சிறப்பு கையேட்டை கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட, சி.ஐ.ஐ. தலைவர் சுப்பாராமன் பெற்றுக் கொண்டார்.

கலெக்டர் பேசுகையில்,” மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக கடந்தாண்டு உருவாக்கப்பட்ட ‘ஹேப்பி ஸ்கூலிங்’ திட்டத்தில் மாணவர்களிடையே நிறைய முன்னேற்றம் ஏற்பட்டது. மதுரை இளைஞர்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் தீர்வு கிடைக்கும். சிலருக்கு சாதாரணமாக தோன்றும் பொருளாதார பிரச்னைகள் சிலருக்கு அசாதாரணமாக தோன்றும். அதன் விளைவே தற்கொலையாகிறது” என்றார்.

கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம் பேசுகையில்,” பள்ளி மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த நிறைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கல்லுாரி அளவிலும் விரிவுப்படுத்த வேண்டும்” என்றார்.அறக்கட்டளை செயல் இயக்குனர் ராஜ்குமாரி நன்றி கூறினார். திட்ட இயக்குனர் செல்வமணி நன்றி கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *