NTLRG 20201102074232282275 Tamil News Spot
Share on Social Media

சாடிய தங்கர்பச்சான்!

02 நவ, 2020 – 07:42 IST

எழுத்தின் அளவு:


Thangar-pachan

நடிகரும் இயக்குனருமான தங்கர்பச்சான் அறிக்கை:தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி தான். தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது, தமிழர் இழந்த நிலங்கள் ஏராளம்.அது போக, இன்றைய நிலையில், ஐந்து நிமிடம் வேற்றுமொழிச் சொல் கலக்காமல் பேசவும், 10 வரிகளாவது, பிற சொல் கலக்காமல் தமிழில் எழுதவும், ஏழு கோடி தமிழர்களில், 1,000 பேர் கூடத் தேற மாட்டார்கள்.ஆனால், நாமெல்லாம் தமிழை எவராலும் அழிக்க முடியாது என, சிறிதும் சிந்திக்காமல், சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கீழடி பெருமையிலேயே, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனிவரும் தலைமுறை, பின்னாளில், ஆங்கிலத் தில் பேசி தமிழ்ச்சங்கங்களும், தமிழ் மாநாடும் நடத்துவர். அதேபோல் தான், எதிர்காலத்தில் தமிழ்நாடு தினத்தையும் கொண்டாடுவர் என்பதை, நாம் மனதில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *