Share on Social Media


புது டில்லி: மத்திய அரசு கடந்த மாதம் தொடங்கிய சன்சாத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மீது வைக்கப்படும் சர்வாதிகாரி என்ற கருத்துக்கு பதிலளித்தார்.

அந்த பேட்டியில் அமித்ஷா கூறியதாவது: எங்களை சர்வாதிகாரி என சிலர் குற்றம்சாட்டுவது நியாயமற்றவை. மோடி போன்று கருத்துக்களுக்கு காது கொடுப்பவரை நான் பார்த்ததில்லை. ஏதேனும் பிரச்சனைக்கான கூட்டம் நடந்தால் மோடி குறைவாகப் பேசுவார். பொறுமையாக அனைவர் பேசுவதையும் கேட்டு முடிவெடுப்பார். ஒரு விஷயத்தில் இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது என்று நாங்கள் அடிக்கடி நினைப்போம். ஆனால் அவர் இரண்டு, மூன்று கூட்டங்களுக்குப் பிறகே பொறுமையாக ஒரு முடிவை எடுப்பார்.

ஒரு நபரின் பரிந்துரை தரமானதா என்று தான் மோடி முக்கியத்துவம் தருகிறார். அந்த நபர் யார் என்பதை அடிப்படையாகக் கொண்டு முக்கியத்துவம் தரமாட்டார். எனவே, அவர் பிரதமராக தனது முடிவுகளை திணிக்கிறார் என்று சொல்வது உண்மையில்லை. அவருடன் வேலை செய்த எதிர்க்கட்சியினர் கூட அமைச்சரவை இதுபோன்ற ஜனநாயக முறையில் முன் எப்போதும் செயல்பட்டதில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். என்றார்.

latest tamil news

ஆண்டுக்கு ரூ.6,000!

விவசாய சட்டங்கள் பற்றி பேசியவர், “விவசாயிகளுக்கு உதவ பாஜக அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 11 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெறுகின்றனர். ஓராண்டுக்குள் ரூ.1.5 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக அது விவசாயிகளுக்கு செல்கிறது. மேலும் சராசரியாக விவசாயம் செய்ய 1.5 முதல் 2 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதன் மூலம் அறுவடை பணம் வருகிறது. அதனால் விவசாயிகள் கடன் வாங்கவில்லை.” என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *