Share on Social Media


இங்கு 25 மீட்டர் நீளத்தில் நீச்சல் குளம் உள்ளது. இதில் மாநில அளவிலான போட்டிகள் மட்டுமே நடத்த முடியும்.

தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளுக்கு 50 மீட்டர் நீளத்தில் 7 வரிசைகளில் வீரர்கள் நீந்தும் வசதி வேண்டும். தற்போதுள்ள 25 மீ., நீச்சல்குளத்தை இடிக்காமல் அருகிலேயே புதிய குளம் அமைப்பது, 500 பார்வையாளர்கள் அமர காலரி அமைப்பது, முதல் தளத்தில் உடை மாற்றும் அறை உட்பட பல்வேறு வசதிகள் செய்ய ரூ.6 கோடிக்கு திட்டமதிப்பீடு அரசுக்கு பொதுப்பணித்துறை வழங்கியது. 2019ல் தமிழக பட்ஜெட்டில், மதுரைக்கு சர்வதேச நீச்சல்குளம் அமைக்க நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய ஆட்சி அமைந்தும் நிதி கிடைக்கவில்லை.மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் கூறுகையில்,”நீச்சல்குளம் அமைக்க அனுமதி கிடைத்துவிட்டது. நிதி ஒதுக்குவது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்” என்றார்.மதுரை, ஜூலை 30 -மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.6 கோடியில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டும் நிதி ஒதுக்காததால் பணிகள் கிடப்பில் உள்ளன.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *