Share on Social Media

சங்கீதம் ஒன்றுதான்; அது தரும் சந்தோஷமும் ஒன்றுதான். ஆனால், சிலருக்கு கர்னாடக சங்கீதம் பிடிக்கும்; வேறு சிலருக்கு லைட் மியூசிக் பிடிக்கும். அதே போல சந்தையிலும் வேல்யூ இன்வெஸ்டிங் (Value Investing), க்ரோத் இன்வெஸ்டிங் (Growth Investing) என்று இரண்டு விதமான முதலீட்டு முறைகள் உள்ளன. வேல்யூ இன்வெஸ்டிங்கின் தந்தை என்று போற்றப்படும் பெஞ்சமின் கிரஹாம் 1920-களில் அதை அறிமுகம் செய்தார்.

சந்தை என்றாலே ரிஸ்க் என்பதால்தான் பலரும் பங்குச் சந்தையில் இறங்க யோசிக்கிறார்கள். அந்த ரிஸ்க்கை மிதமாக்கும் வழிதான் அண்டர்வேல்யூட் ஸ்டாக்ஸைக் கண்டுபிடித்து முதலீடு செய்யும் வேல்யூ இன்வெஸ்டிங் முறை. பிரபல இன்வெஸ்டார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, “நல்ல கம்பெனிகளை அடையாளம் காண்பது பெரிதல்ல; நல்ல கம்பெனிகளை நல்ல விலையில் கண்டுபிடிப்பதுதான் பெரிய விஷயம்” என்கிறார். இதற்கு வேல்யூ இன்வெஸ்டிங் முறைதான் உதவும்.

Share Market (Representational Image)

Share Market (Representational Image)

வாரன் பஃபெட், பீட்டர் லின்ச் போன்ற முக்கிய முதலீட்டாளர்களின் மனதைக் கவர்ந்த அந்த முதலீட்டு முறை பற்றிப் பார்க்கலாம்.

சில கம்பெனிகளின் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) அதன் சந்தை விலையைவிட அதிகமாக இருக்கும். இதை அண்டர் வேல்யூட் ஸ்டாக் என்பார்கள். இன்னும் சிலவற்றில் சந்தை விலை, உள்ளார்ந்த மதிப்பைவிட அதிகமாக இருக்கும். இதை ஓவர்வேல்யூட் ஸ்டாக் என்பார்கள். அண்டர் வேல்யூட் கம்பெனிகளைத் தேடிப் பிடித்து வாங்குவதை வேல்யூ இன்வெஸ்டிங் என்கிறோம். இவற்றைக் கண்டுபிடிக்க சந்தை நிலவரம் பற்றியும், அந்தக் கம்பெனி சார்ந்திருக்கும் செக்டார் பற்றியும், கம்பெனியின் பிசினஸ் பற்றியும் முற்றிலும் அறிந்திருக்க வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *