Share on Social Media


பா.ஜ.,வில் இருந்து விலகி, தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ‘ராஷ்ட்ரா மன்ச்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு சார்பில், பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகளுக்கு தேசிய அளவில் ஆலோசனை கூட்டத்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டில்லியில் சரத்பவார் தலைமையில், அவரது இல்லத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில், ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி ,தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, ஆம் ஆத்மியின், சுஷீல் குப்தா, கவிஙர் ஜாவேத் அக்தர், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, முன்னாள் தூதர் சிங், முன்னாள் நீதிபதி ஏபி ஷா கலந்து கொண்டனர். இந்திய கம்யூ., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பினோய் விஸ்வம், மார்க்சிஸ்ட் சார்பில் நிலோட்பால் பாசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

சரத்பவார்

சரத்பவார்

முதலில், பா.ஜ.கவுக்கு எதிராக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை சரத்பவார் ஒருங்கிணைக்கிறார் என்கிற தகவல்கள் பத்திரிகைகளில் வெளியானது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேனன் அதனை மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸை அழைக்காததால்தான் தி.மு.க கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *