Share on Social Media


சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும்  புதிய கட்டுப்பாடுகள்!

* வாடிக்கையாளர்களின் புகார்களைப் பெறுவதற்கும், அது குறித்து விசாரணை நடத்துவதற்கும் தலைமை புகார் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். பெறப்படும் புகார்களை 24 மணி நேரத்துக்குள்ளாக பதிவு செய்து, அதற்கான தீர்வு 15 நாள்களுக்குள்ளாக எட்டப்பட வேண்டும்.

* பெண்கள் குறித்த ஆபாசப் புகைப்படங்கள், பதிவுகளை, புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாக நீக்க வேண்டும்.

* ஆபாசம், இனவெறி, அவதூறு, குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பவை போன்ற கருத்துகளைத் தடை செய்ய வேண்டும். அதேபோல தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான தேவையற்ற கருத்துகளையும் தடை செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

* அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும். நீதிமன்றங்கள், அரசுக்கு, அந்த வாடிக்கையாளரின் தகவல்களை வழங்க வேண்டும்.

* நீதிமன்றமும் அரசும் எப்போது தகவல் கேட்டாலும் 15 நாள்களில் சமூக வலைதள நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

* சைபர் பாதுகாப்பு விசாரணை அல்லது சட்ட விதிமீறலுக்காக, விசாரணை அமைப்புகள் கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *