Share on Social Media


சென்னை: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான பன்னாட்டு தின தொடர் கருத்தரங்கு நிறைவு நாள் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களது திறமைக்கு உரிய இடமளித்து அவர்களை உயர்த்திவிட்டால், தாங்கள் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ, என்று குறுக்கு புத்தி மேலோங்கும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் பெருகிட காரணமாக அது அமைந்து விடுகின்றது. பெண்கள் சமுதாயத்திற்கு எதிரான இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டியதும், அதை சீர்ப்படுத்தி பெண்களுக்கு, நீதி பெற்றுத் தர வேண்டியதும் நாகரிக உலகின் கடமை ஆகும்.நான் சிந்தித்து பார்க்கின்றேன், அரசுக்கு 5 ஆண்டு பதவிகாலம் இருக்கின்ற நிலையில், ஏன் ஆண்கள் 2 1/2 வருடம், பெண்கள் 2 1/2 வருடம் இந்நாட்டை ஆளக்கூடாது.

இந்தநிலையை இந்திய அரசியல் சட்டத்தின் மூலமாக அவர்களுக்கு வழங்கினால், ஆணுக்கு பெண் நிகர், சமம் என்ற நிலையை சமுதாயத்தில் அத்தனை நிலைகளிலும் கொண்டு வருகின்ற பொழுது பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  குறையும். இப்படி ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலை அனைத்து நிலைகளிலும் கொண்டு வருகிற பொழுது, மிக பெரிய சமுதாய மாற்றம்,  மனித குலத்தில் உருவாக்கப்படுகிற ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணுக்கு  பெண் சமம் என்ற நிலையை உருவாக்க முடியும் என்ற ஒரு அடித்தளம் அமைகின்ற பொழுது, அது இயல்பாகவே ஒரு நல்ல வாய்ப்பு உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *