Share on Social Media


புதுடில்லி: விதிமுறை புத்தகத்தை வீசி எறிந்ததாக, திரிணமுல் காங். ராஜ்யசாப எம்.பி., டெரிக் ஓ. பியைன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா – 2021, நேற்று(டிச.,20) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று(டிச.21) ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.

இந்நிலையில் திரிணாமுல் காங்., ராஜ்யசபா எம்.பி., டெரெக் ஓ பிரையன், மசோதா குறித்த விதிமுறை அடங்கிய புத்தகத்தை வாசித்தபடி விவாதம் நடத்தினார். அப்போது சபையின் நடத்தை விதிமுறைகளை மீறி திடீரென புத்தகத்தை நாற்காலி மேல் வீசினார். இதையடுத்து சபை விதிமுறைகளை மீறியதாக ராஜ்யசபாவின் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய பகுதி முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *