Share on Social Media

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிக்கு இந்தியாவின் டுட்டீ சந்த் தகுதி பெற்றுள்ளார். இந்திய தடகள வீராங்கனை டுட்டீ சந்த் 25. ஆசிய விளையாட்டு (2018), 100, 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற இவர், ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டிலும் பதக்கங்களை அள்ளினார். சமீபத்தில் பாட்யாலாவில் நடந்த இந்திய தடகள கிராண்ட் பிரிக்ஸ்–4, 100 மீ., ஓட்டத்தில் இலக்கை 11.17 வினாடியில் கடந்த இவர், 0.02 வினாடியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இதேபோல, மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., ஓட்டத்தில் 4வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *