Share on Social Media


‘சபாபதி’யாக சந்தானம், ஆச்சர்யமூட்டும் விதமாக ஓர் இயக்குநரின் நடிகராக வந்திருக்கிறார். கேப்பே விடாத கவுன்ட்டர்கள்தான் அவரின் ஆகச்சிறந்த பலம் எனும்போது, துணிந்து அதைத் தூரவைத்துவிட்டு, திக்குவாய் பிரச்னை கொண்ட மனிதராக வந்துபோகிறார். அதே சமயம், இந்த அப்பாவி சபாபதி, குடித்த பிறகு அப்பாவை வைத்து அடிக்கும் லூட்டிகள் அதிரடி சிரிப்பு வெடி. குறிப்பிட்டுச் சொல்லும்படி, எமோஷன் காட்சிகளிலும் ஒரு நடிகனாக மெருகேறியிருக்கிறார். இப்படியான ‘அண்டர்பிளே’ ரோல்களை அவ்வப்போது செய்யலாமே சாண்டா?!

ஸ்ட்ரிக்ட் தமிழ் வாத்தியார் எம்.எஸ்.பாஸ்கர், அப்பாவாகவும் அதே கண்டிப்புடன் அதகளம் செய்கிறார். ஒரு சில காமெடிகள் எக்ஸ்பைரியானவை என்றாலும் இவரின் நடிப்பு அவற்றையெல்லாம் பாஸ் மார்க் பெற வைக்கிறது. கதாநாயகி ப்ரீத்தி வர்மாவுக்கும் பெரிய வேலையில்லை, பெரிதாக எதிர்பார்த்த ‘குக் வித் கோமாளி’ புகழுக்கும் வேலையில்லை. டெரர் வில்லனாக மிரட்ட மட்டுமே செய்கிறார் வம்சி. ஏதாவது செயலிலும் இறங்கியிருக்கலாம். இன்னொரு வில்லனாக ஷாயாஜி ஷிண்டே மட்டும் கொஞ்சம் சீரியஸ் முகம் காட்டுகிறார். உமா பத்மநாபன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன் உள்ளிட்ட பலர் அட்டென்டஸ் மட்டுமே போடுகின்றனர். ஆனால், சிரிப்பும் காட்டவில்லை, சென்டிமென்ட்டும் காட்டவில்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *