Share on Social Media


நீண்ட வருட இடைவெளிக்கு பின் தமிழுக்கு வருகிறார் சன்னி லியோன். ‘வடகறி’யில் ஒரு பாடலுக்கு மட்டுமே ஆட்டம் போட்டவர், அதன்பிறகு ‘வீரமாதேவி’யில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்தப்படம் அப்படியே நிறுத்தப்பட, இப்போது ‘ஷீரோ’ (‘shero’) எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் தம்பி ராமையா, சதீஷ் என பலரும் நடித்துள்ளார்கள். சன்னி லியோனுடன் நடித்த அனுபவம் பற்றி தம்பி ராமையாவிடம் கேட்டேன்.

”இதுவரைக்கும் நான் சிரிக்க வச்சிருக்கேன். அழ வச்சிருக்கேன். வில்லனா பண்ணியிருக்கேன். ஆனா, முதன்முறையா சன்னி லியோனோட நடிச்சிருக்கற ‘ஷீரோ’ல சைக்கோ வில்லனா நடிச்சிருக்கேன். காமெடி சைக்கோ. சன்னி லியோனை இம்ப்ரஸ் பண்ணி அவங்களை அடையத் துடிக்கற ஒரு கேரக்டர்.

என்னுடைய போர்ஷனுக்கு என்னையே டயலாக் எழுத சொன்னாங்க. வேற லெவல்ல பண்ணியிருக்கேன். படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்ல ரிலீஸ் ஆகுது. மலையாளத்துல ஏற்கெனவே ரெண்டு படங்கள் இயக்கிய ஶ்ரீஜித் இதை டைரக்ட் பண்ணியிருக்கார்.

விஷால் நண்பரும், நடிகருமான முன்னா மூலம்தான் இந்த படத்தின் கதையை கேட்டேன். கேரக்டருக்காக ஃபிட்னஸிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கேன். நான் டூப் வைக்காம, ரோப் இல்லாம ஜம்ப் பண்றது, கீழே விழுறதை பார்த்த சன்னி லியோனியும், அவங்களுக்கு டூப் வைக்காம நடிச்சாங்க. ‘இண்டர்நேஷன்ல் ஃபிகர்… நானே இவ்ளோ ஒர்க் அவுட் பண்ணது இல்ல. உங்க ஒர்க் அவுட் சூப்பர்ப்”னு சொல்லி என் ரசிகையாகவே மாறிட்டாங்க. அடிக்கடி ஸ்வீட்டும் கொடுத்து பாராட்டினாங்க. என்னுடைய உழைப்பால சன்னி லியோனை ரொம்ப ஈஸியா கரெக்ட் பண்ணிட்டேன்.

தம்பி ராமையா

தம்பி ராமையா

படத்துல என்னோட பர்ஃபாமென்ஸ் அந்த சன்னி லியோனுக்கு அவ்ளோ பிடிச்சிடுச்சு. அவங்களோட மூணு குழந்தைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. சன்னி என் ரசிகையா மாறின பிறகு அவங்க நான் தங்கிருந்த அறைக்கு பக்கத்து அறைக்கே மாத்திட்டு வந்துட்டாங்க. குழந்தைகளும் அடிக்கடி வந்து பேசுவாங்க.

நம்ம உழைப்பும், சிரிப்பும் மத்தவங்களை கவர்ந்திடும். அதனாலேயே அவங்ககிட்ட இருந்து எனக்கு அப்படி ஒரு அன்பு மழை. படத்துல நான் வரும் நாற்பது நிமிஷ போர்ஷனும் செம சிரிப்பா இருக்கும். டப்பிங்கையும் முடிச்சு குடுத்துட்டு தம்பி விஷாலோட ‘எனிமி’க்கு கிளம்பி வந்துட்டேன்” என எப்போதும்போல உற்சாகமாக சிரிக்கிறார் தம்பி ராமையா.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *