Share on Social Media

சென்னை: தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன், ‘கொரோனா’ நிவாரண பணிகளுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கினார்.

இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை பரவுகிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு உதவிடும் வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின், கோஹ்லி, ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், பிரட் லீ உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர்.

இந்நிலையில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 28, தமிழக முதல்வரின் ‘கொரோனா’ பொது நிவாரண நிதிக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இவர், கடந்த ஆண்டு ‘கொரோனா’ நிவாரண பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ. 1.25 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார்.

இதுகுறித்து சத்யன் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. ‘கொரோனா’ தொற்றால் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, இந்நோய்த் தொற்றுக்கு எதிராக போராட வேண்டிய நேரம் இது. தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. ஒரு லட்சம் நன்கொடை வழங்குகிறேன். ‘கொரோனா’ இரண்டாவது அலைக்கு எதிராக நாம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

ரூ. 35 லட்சம் நிதி

இந்திய செஸ் நட்சத்திரங்களான, 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, நிஹால் சரின், பிரக்யானந்தா ஆகியோர் ‘ஆன்லைன்’ முறையில் கண்காட்சி போட்டி நடத்தி நிதி திரட்டினர். இதில் கிடைத்த ரூ. 37 லட்சத்தை ‘கொரோனா’ நிவாரண நிதிக்கு வழங்கினர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *