Share on Social Media


விழா கொண்டாட்டத்துக்கான வரலாற்றை தி.மு-க மறைக்கிறது என்ற விமர்சனத்துக்கு தி.மு.க தரப்பிலிருந்து பலரும் பதில் தந்துகொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமார் கேள்வி எழுப்பியது முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல. தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, “சபாநாயகராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது” என்று பதிலடியாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

“1919-ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அன்றைய மாகாண சட்டமன்றங்களில் முதன் முதலாக இடம்பெறத் தொடங்கினர். சென்னை மாகாண மன்றத்துக்கு 1920-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில், நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது. 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. பனகல் ராஜா, டாக்டர் பி.சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி.ராசன், குர்மா வெங்கடரெட்டி நாயுடு என நீதிக்கட்சியின் முதல் அமைச்சர்கள் 17 ஆண்டு காலம் பதவி வகித்தார்கள்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

டாக்டர் பி. சுப்பராயன் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீடு வழங்கி, அரசாணை அமல்படுத்தப்பட்டது. எனவேதான், டாக்டர் பி.சுப்பராயனின் உருவப் படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 23.3.1947 முதல் 6.4.1949 வரை ஓ.பி. ராமசாமி ரெட்டியார் முதலவராக இருந்தபோது, நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே, அவருடைய உருவப் படமும் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்ற வரலாறு 1921-ம் ஆண்டே தொடங்கிவிட்டது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *