Share on Social Media


திருவண்ணாமலை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் பொழுது பாஜக சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி சொந்த கட்சியினரே 50 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றப்பட்டதாக அந்த கட்சி பிரமுகர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தம்மன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆரணி நகர பாஜக தலைவர் புவனேஷ்குமார் கொடுத்த புகாரில் தனக்கு ஆரணி தொகுதியிலும் தன்னுடைய சகோதரருக்கு திருவண்ணாமலை தொகுதியிலும் எம்.எல்.ஏ. சீட் பெற்றுத் தருவதாக ஆசை வாரத்தை கூறி சிலர் 1 கோடி ரூபாய் பணம் கேட்டதாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை நம்பி கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தம்மன், அதிமுக நிர்வாகி விஜயராமன் உட்பட 4 பேரிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். தம்மை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புவனேஷ்குமார் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து நரோத்தம்மன், அவருடைய தந்தை சிட்டிபாபு, விஜயராமன், சிவபாலாஜி ஆகியவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *