Share on Social Media


திருவனந்தபுரம்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றுவதற்காக, இன்று(டிச.,23) கூட்டப்படுவதாக இருந்த சட்டசபை சிறப்பு கூட்டத்துக்கு, கேரள கவர்னர் அனுமதி மறுத்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற, பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கட்சி முடிவு செய்தது.

இதற்காக, சட்டசபை சிறப்பு கூட்டத்தை இன்று கூட்ட, கவர்னர் ஆரிப் முகமது கானிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், சிறப்பு கூட்டத்துக்கு அனுமதி அளிக்க, கவர்னர் ஆரிப் முகமது கான், மறுப்பு தெரிவித்தார். ‛கவர்னரின் முடிவு, ஜனநாயகத்துக்கு எதிரானது’ என, கேரள வேளாண் துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *