Share on Social Media


அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ உரையாடல்களால், தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது. ‘‘கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாகுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நான் நிச்சயம் வர்றேன். தைரியாக இருங்கள்’’ என்று சசிகலா சொல்லியிருப்பது, அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க-வில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கடிந்து கொட்டியிருக்கிறார், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

சசிகலா

சசிகலா அ.தி.மு.க-வில் இல்லை. சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் அ.தி.மு.க-வில், சசிகலாவை முன்னிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்தக் குழப்பத்திற்கு ஒரு அ.தி.மு.க தொண்டரும் செவி சாய்க்க மாட்டான். ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்களும், பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளும் கட்டிக்காத்து, இந்த இயக்கத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஈடேறாது.

சசிகலாவிடம் எந்த ஒரு அ.தி.மு.க தொண்டரும் பேசவில்லை. மாறாக, சசிகலாதான் தொண்டர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார். அவர் பேசும் தொண்டர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் அல்ல. அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர். சசிகலா தன்னோடு இருக்கும் ஒரு சில நபர்களைத் தேர்வுசெய்து இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்தக் குழப்பம் நிச்சயமாக வெற்றி அடையாது. இதன் மூலம் சசிகலாதான் ஏமாறுவார். சாதாரண நிலையில் இருந்த சசிகலா குடும்பம் அ.தி.மு.க-வாலும், ஜெயலலிதாவாலும் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது.

vikatan 2021 03 f3401467 37e3 4105 8d36 5b02ce0fedde F D 13 Tamil News Spot
எடப்பாடி பழனிசாமி

இந்த இயக்கத்தைத் உயர்த்தக் காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது சசிகலா ஒதுங்கி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஜெயலலிதாவின் பழி பாவம் சசிகலாவையே சாரும். சசிகலா எந்தச் சூழலிலும் அ.தி.மு.க-வில் நுழைய முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. அ.தி.மு.க தொண்டர்கள் தெளிவாக இருக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. கொரோனா பேரிடர் சமயத்தில் அவரவர் தங்கள் தொகுதியில் இருந்து குறைகளைச் சுட்டிக்காட்டி தனித்தனியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என, சசிகலாவை முன்னிறுத்தி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். இதற்கு சசிகலா இரையாகிவிடக் கூடாது” என்றார் கே.பி.முனுசாமி.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *