Share on Social Media


சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சசிகலா, தனது தண்டனை காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக இருக்கிறார். விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், சிறையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து பெங்களூரு சிவாஜி சாலையில் உள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சசிகலாவின் உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது மூச்சுத் திணறல் எதுவும் இல்லை. அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையில் இருப்பார் – ப்வரிங் மருத்துவமனை இயக்குநர் மனோஜ்

பவ்ரிங் அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததினால் விக்டோரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா. மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும் போதும் ஆதரவாளர்களை நோக்கி உற்சாகத்தோடு கையசைத்தார் .

விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று உள்ளது தெரியவந்துள்ளது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.

மருத்துவமனை அறிக்கை

நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *