Share on Social Media


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். தனது தி.நகர் வீட்டிலிருந்து அதிமுக கொடி கட்டியக் காரில் புறப்பட்ட சசிகலா மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு வந்தார். அவருடன் நூற்றுக்கணக்கான தொடர்களும் அங்கு வந்திருந்தனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில், கண்கலங்கிய நிலையில் மலர் தூவி மரியாதையைச் செலுத்தினர்.

அதிமுக கொடி கட்டியக் காரில் சசிகலா

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “அம்மாவுடன் நான் இருந்த காலம் என் வயதில் முக்கால் பகுதியாகும். அம்மா இல்லாத இந்த காலத்தில், என் மனதிலிருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்துவிட்டேன். தலைவரும், அம்மாவும், தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள். தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.

Also Read: Tamil News Today: `4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்!’ – சசிகலா பேட்டி

நான் அம்மாவிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி, ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதைச் சொல்லிவிட்டுத் தான் வந்தேன். நிச்சயம் தொண்டர்களையும், கழகத்தையும் அம்மாவும், தலைவரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு நான் புறப்படுகிறேன்” என்றார். அப்போது, `அதிமுக தலைமை கழகத்திற்குச் செல்வீர்களா’ என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு `சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு’ அங்கிருந்து புறப்பட்டார்.

WhatsApp Image 2021 10 16 at 12 27 52 PM Tamil News Spot
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா

சசிகலா முன்பு தொண்டர்களோடு தொலைப்பேசியில் பேசியபோது, `கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்திப்பேன்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *