Share on Social Media


திண்டிவனம்:’மொபைல் போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீதும், அதற்கு துாண்டுதலாக இருக்கும் சசிகலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, முன்னாள் அமைச்சர் சண்முகம், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான சண்முகம், நேற்று விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் அளித்த புகார்:விழுப்புரத்தில், 7ம் தேதி அரசியல் ரீதியாக சசிகலா குறித்து, ஊடகங்களில் சில கருத்துகளை தெரிவித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதில் அளிக்காமல், தன் அடியாட்களை வைத்து, மொபைல் போன் மூலம் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்.

மேலும், சமூக ஊடகங்களான, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர்’களிலும், அநாகரிகமாக பதிவிட்டு வருகின்றனர். நேற்று வரை, 500 மொபைல் போன் அழைப்புகள் வந்துஉள்ளன. இன்னமும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.’சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம்’ என மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இதற்கு சசிகலாவின் துாண்டுதலே காரணம்.

சசிகலா மீதும், என் மொபைல் போனில் வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரோஷணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *