Share on Social Media


புகார் மனுவில், இதுவரை 500 போன் கால்கள் வந்துள்ளதாகவும், அனைவரும் ஆபாசமாக திட்டுவதாகவும் குமுறியிருக்கிறார் சண்முகம்.

கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரைப் போன்றே கே.சி.வீரமணிக்கும், சசிகலாவுடன் நீண்ட காலமாகப் பனிப்போர் நீடிக்கிறது. சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வருவதையறிந்து கொந்தளித்துள்ளார் வீரமணி.

கே.சி.வீரமணியிடம் பேசினோம். ‘‘எடப்பாடியார் என்ன சொல்லியிருக்கிறாரோ, அதுதான் எங்களின் நிலைப்பாடும். கட்சித் தலைமைக்கு நாங்கள் கட்டுப்பட்டிருப்போம். சசிகலா மீது நடவடிக்கை எடுத்து ரொம்ப நாள் ஆகிறது. யாருடைய தூண்டுதலாலோ, அவர் இப்படிச் செய்கிறார். பின்னாளிலிருந்து அவரைப் பேச வைப்பவர் யாரென்றுதான் தெரியவில்லை.

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

இரட்டை தலைமையில் எந்த பிரச்னையும் இல்லை. ஓ.பி.எஸ்-ஸும், இ.பி.எஸ்-ஸும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்’’ என்றவரிடம்…

‘‘கட்சிக்குள் சமூக ரீதியாக பிரச்னை எழுந்திருப்பதுபோல் தெரிகிறதே?’’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

‘‘அப்படியெல்லாம் இல்லைங்க’’ என்று ஒரே வரியில் அந்த கேள்வியைக் கடந்துச்சென்ற வீரமணி, ‘‘ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் எப்படியோ, பத்து ஆண்டுகள் இருந்துவிட்டோம். 2016 தேர்தலிலேயே, நாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, அதிசயம்தான். அந்த சமயத்தில், அம்மா கஷ்டப்பட்டு ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். அம்மாவுக்குப் பின் வந்த எடப்பாடியாரும் சிறப்பாகத்தான் ஆட்சி செய்தார். விவசாய கடன்களை ரத்து செய்தார். எவ்வளவோ, நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஆனாலும், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்’’ என்றவரிடம்…

‘‘ஒருவேளை சசிகலா கட்சியைக் கைப்பற்ற மீண்டும் அரசியலுக்குள் வந்துவிட்டால், உங்கள் முடிவு என்னவாக இருக்கும்?’’ என்றோம்.

அதற்கு அவர், ‘‘தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *