Share on Social Media


ஒமைக்ரான்

ஒமைக்ரான்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் ஈ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ், ‘இந்தியாவின் மிகவும் விலைகுறைந்த கொரோனா தடுப்பூசி’ என்ற பெருமையைப் பெறக்கூடும். ‘இரண்டு தவணை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகும்’ என்று இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஹிமா தட்லா பெருமையுடன் சொல்கிறார். 110 ரூபாய் செலவில் ஒரு டோஸ் தயாரித்துவிட முடியுமாம்.

அமெரிக்காவில் உள்ள பாய்லர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இந்தத் தடுப்பூசியை பயாலஜிக்கல் ஈ நிறுவனம் தயாரிக்கிறது. இதை அதிக அளவில் தயாரிக்க வேண்டும் என்பதற்காக பயாலஜிக்கல் ஈ நிறுவனத்துக்கு அமெரிக்காவின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் பெரிய அளவில் நிதியுதவி செய்வதாக அறித்துள்ளது. 2022ம் ஆண்டு இறுதிக்குள் 100 கோடி டோஸ் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹெபாடைடிஸ் பி தடுப்பூசியை உருவாக்கும் பாரம்பரிய முறையில்தான் இதுவும் தயாராகிறது. கொரோனா வைரஸின் புரதமே இந்தத் தடுப்பூசிக்கும் ஆதாரம். இது விற்பனைக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசு 30 கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்து வைத்திருக்கிறது.

புதிய தடுப்பூசிகள்

புதிய தடுப்பூசிகள்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.