Share on Social Media


கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகளை ரத்து செய்யக்கூடாது, தொகுதிகளில் அரசு பணி நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்

மனு

Also Read: `சாதிரீதியாகச் செயல்படும் வேலுமணி’ – சசிகலாவிடம் குமுறிய கோவை அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகி

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

அதன் பிறகு எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பொது மக்களை காக்க வைக்காமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். மழைநீரை முறைப்படி சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை, தற்போதைய அரசு ரத்து செய்து வருகின்றனர்.

IMG 20210730 WA0000 Tamil News Spot
வேலுமணி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணித்துவிட்டு, எந்த பதவியிலும் இல்லாத ஆளுங்கட்சிக்காரர்களை உடன் வைத்துக் கொண்டு பூமி பூஜை உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

Also Read: `சாதிரீதியாகச் செயல்படும் வேலுமணி’ – சசிகலாவிடம் குமுறிய கோவை அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகி

அதுபோன்ற சம்பவங்களை இதன் பிறகாவது தவிர்க்க வேண்டும். தி.மு.க அரசால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எங்களுக்கும், மக்களுக்கும் வருகிறது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

IMG 20210601 WA0008 Tamil News Spot
கோவை

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, வாராவாரம் கூட்டம் நடத்தி பல்வேறு பணிகளை ஆய்வு செய்வாம். அதேபோல, இந்த ஆட்சியிலும் செய்ய வேண்டும்” என்று கூறினார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *