Share on Social Media


மாணவியின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, அவரின் மரணத்துக்கு நீதி வேண்டியும், பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்து முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும், சின்மயா பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில், போலீஸார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். மாணவிக்கு மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவியின் செல்போனை பறிமுதல் செய்திருக்கும் போலீஸார், அவர் யாரிடம் எல்லாம் பேசினார் என்று விசாரித்து வருகின்றனர். முக்கியமாக, மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும், ரித்துவின் தாத்தா, எலிசா சாருவின் அப்பா யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *