Share on Social Media


பொதுமக்களுக்குச் சுமையா?

தடுப்பூசி விலை உயர்வால், பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தி தடுப்பூசி பெற வேண்டிய நிலை ஏற்படுமா? என்கிற சந்தேகம் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாகச் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், டெல்லி, அஸ்ஸாம், சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.

மற்ற மாநிலங்களில், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், அரசு மானியம் வழங்கும் என்பதால் குறைந்த விலைக்குத் தடுப்பூசிகள் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், ரூ. 600 அல்லது அதற்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறித்த விவாதங்கள் நடந்த கொண்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் கோவாக்ஸின் தடுப்பூசி மருந்தின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், `விலை உயர்வு மூலம் இரண்டு தடுப்பூசி நிறுவனங்களும் மிகப் பெரிய லாபம் சம்பாதிக்க நினைக்கிறது. இதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது’ என்கிற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. எனவே, இந்தத் தடுப்பூசி விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *