Share on Social Media


‘கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் 4 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை’ என கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் நாளை (2ம் தேதி) ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். சிறப்பு பூஜையில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பர். எனவே கொரோனா தொற்று பரவாமல் இருக்க இன்று முதல் 3ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி என 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. கோவில்களில் சுவாமிக்கு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *