Share on Social Media

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில்தான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. திடீர் ஆக்ஸிஜன் குறைபாடு கொரோனா அறிகுறிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னையும் தற்போது தலைவிரித்தாடுகிறது. கொரோனா பரவல் அதிகரித்துச் செல்வதால் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகளும் மருத்துவர்களும் திண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வீட்டில் தனிமைப்படுத்திகொள்பவர்கள் சிலர் தங்களுக்குத் தெரிந்த கைவைத்தியத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

corona

இவ்வாறான இடர்ப்பாடு நிறைந்த சூழலில்,

வீட்டுக்குள் ஒருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்?

45 வயதுக்கு மேற்பட்ட, இணைநோய் உள்ளவர்கள் பாசிட்டிவ் ஆனால் என்ன செய்ய வேண்டும்?

யாருக்கெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்துதல் போதுமானது?

மருத்துவமனையில் இடம் இல்லாவிட்டால் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? போன்ற பல கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துவருகிறது.

இந்நிலையில், கோவிட்-19 தொடர்பான ஆலோசனைகள் மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் அவள் விகடன் சார்பில் `கோவிட்-19 ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?’ – என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 27) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா நிகழ்ச்சியில் பங்கேற்று கொரோனா தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு, குழப்பங்களுக்கு, சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

WhatsApp Image 2021 04 26 at 1 20 00 PM Tamil News Spot
வழிகாட்டல் நிகழ்ச்சி

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://forms.gle/z1hGdUXrHjwnkuR37

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *