Share on Social Media


ஆபத்தான பட்டியலில் உள்ளவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 முதல் ஓராண்டு ஆகிவிட்டது என்றாலோ, நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலோ இவர்களின் உடலில் கோவிட் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடியின் அளவு சற்றுக் குறைந்திருக்கலாம். எனவே, இவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பொதுவெளியில் அதிகம் பணியாற்றுபவர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு பிற நாடுகளில் பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் அதைச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

Pulmonologist Dr.Sindhura

Pulmonologist Dr.Sindhura

7 – 8 நாள்களுக்குப் பிறகே சுவை, வாசனை இழப்பு, குறைந்த வெப்பநிலையில் காய்ச்சல், லேசான உடல் சோர்வு என கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகளில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது உண்மையா என்றும் 1% பேருக்குத்தான் மூச்சுத்திறணல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறதா என்றும் கேட்டோம்:

“பெரும்பாலானவர்களுக்கு உடலில் கோவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதால் கோவிட் வந்தால் ஆரம்ப நாள்களில் உடலில் வைரஸ் இருந்தாலும் அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் கழித்துதான் இருமல், லேசான காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் வெளியே தெரியும். அந்த அறிகுறிகளும் லேசானதாகவே காணப்படும். காரணம், உடலிலிருக்கும் ஆன்டிபாடி தங்களால் இயன்றவரை வைரஸுக்கு எதிராகப் போரிடும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *