Share on Social Media

நாடெங்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் கோவிட்-19 நோயாளிகள் பலர் உயிரிழக்கின்றனர். இந்த பீதியால் ஆரோக்கியமானவர்கள்கூட ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் நெபுலைஸர், போர்ட்டபுள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வீட்டில் வாங்கி வைக்கத் தொடங்கியுள்ளனர். இது அவசியம்தானா நெபுலைஸரும், ஆக்ஸிஜன் சிலிண்டரும் கோவிட்-19 தொற்றுக்கு செயலாற்றுமா என்று பல சந்தேகங்கள் எழுகின்றன.

Hospital

இதுபற்றி நுரையீரல் மருத்துவர் ஜாக்கின் மோசஸிடம் கேட்டோம்:
“நெபுலைஸர் (Nebulizer) கருவி என்பது மருந்து கொடுக்கும் ஒருவகை கருவி. எப்படி நாம் வாய் வழியாக மாத்திரை சாப்பிடுகிறோமோ, தசை, நரம்புகள் வழி ஊசி போட்டுக் கொள்கிறோமோ அதே போன்று இதுவும் நீராவி மூலம் நுரையீரலுக்குள் மருந்தைச் செலுத்தும் முறை.

ஆஸ்துமா, மூச்சுப் பிரச்னைகளுக்கான மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளிட்ட நிறைய மருந்துகள் இதன் மூலம் செலுத்தப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த முறை மூலம் இன்சுலின் கொடுக்கலாமா என்றுகூட ஆராய்ச்சி நடைபெற்றது.

நெபுலைஸரை இரண்டு வகையாகப் பயன்படுத்துவார்கள். சிலர் நாள்தோறும் காலை, மதியம், இரவு எடுக்க வேண்டிய மருந்துகளையே நெபுலைஸரின் மூலம்தான் எடுக்க வேண்டும். சில நோயாளிகளுக்கு அவசர தேவைக்கு மட்டும் பயன்படும். ஏற்கெனவே நுரையீரலில் பிரச்னை இருந்து, கோவிட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகளில் சிலருக்கு ஏற்கெனவே இருக்கும் நுரையிரல் பிரச்னை தொந்தரவு கொடுக்கலாம். அதுபோன்ற நோயாளிகள் நெபுலைஸர் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இது தவிர, வேறு யாரும் நெபுலைஸர் பயன்படுத்தக் கூடாது. மேலும் மருத்துவர் பரிந்துரையின்றி நெபுலைஸர் கருவியை வாங்கக் கூடாது. ஆக்ஸிஜனுக்காகவோ, கோவிட்டால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கோ நெபுலைஸர் பயன்படும் என்பதெல்லாம் மிக மிகத் தவறானது. அதன் பின்னால் எந்த மருத்துவ உண்மையும் கிடையாது.

Oxygen Concentraor

ஆக்ஸிஜன் கான்சென்டிரேட்டர் என்று ஒரு கருவி உள்ளது. அது காற்றிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்து ஒரு ஃபில்டர் வழியாக அனுப்பி, அதிலிருக்கும் நைட்ரஜனை நீக்கி, சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கக் கொடுக்கும். சுமார் 10, 15 ஆண்டுகளாக நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. 35,000 ரூபாய் முதல் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. நுரையீரல் பிரச்னையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு இரண்டு, மூன்று வாரங்கள் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படலாம்.

தீர்வே அளிக்க முடியாத நுரையீரல் பிரச்னை உடையவர்களுக்கு நோய் தீவிரமாக தீவிரமாக ஆக்ஸிஜன் தேவைப்படும். அது போன்றவர்கள் இதை வாங்கி வீட்டில் பொருத்திப் பயன்படுத்த வேண்டும். சிறிய சூட்கேஸ் அளவு இருக்கும். மின்சாரத்தில் இயங்கக்கூடியது.

Nebulizer Tamil News Spot
Nebulizer

Also Read: ஸ்டெர்லைட் இன்றியே நம்மால் சமாளிக்க முடியுமா… ஆக்ஸிஜன் உற்பத்தியில் நடப்பது என்ன? #Explainer

தீவிர கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று குணமாகும் நோயாளிகளில் சிலர் செயற்கை ஆக்ஸிஜன் கருவியைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. நுரையீரலின் செயல்திறன் மீண்டும் இயல்புக்கு வருவது வரை அவர்களுக்கு இதைப் பரிந்துரைக்கிறோம். கோவிட் குணமாகித் திரும்பும் நோயாளிகளுக்கு சில நாள்களுக்கு 24 மணி நேரமும் இதைப் பயன்படுத்த அறிவுறுத்துவோம். நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து நேரத்தைத் தீர்மானிப்போம்.

ஆக்ஸிஜன் சிலிண்டரைவிட கான்சென்டிரேட்டர் சிறந்தது. காரணம், ஆக்ஸிஜன் சிலிண்டர் குறிப்பிட்ட கொள்ளளவுடன்தான் வரும். அதிலிருக்கும் ஆக்ஸிஜன் தீர்ந்தவுடன் மீண்டும் மீண்டும் சிலிண்டரை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் கான்சென்டிரேட்டர் மின்சாரத்தில் இயங்குவதால் காற்றிலிருந்தே ஆக்ஸிஜனை பிரித்தெடுத்துக் கொடுத்துவிடும். ஆக்ஸிஜன் கான்சென்டிரேட்டரிலும் பேட்டரியால் இயங்கும் போர்ட்டபுள் கருவி உள்ளது. பேட்டரியினால் 6 – 8 மணி நேரம் இயங்கும்.

போர்ட்டபுள் ஆக்ஸிஜன் சிலிண்டர்

Dr Jackin Moses Tamil News Spot
Pulmonologist Dr. Jackin Moses

இது ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டுள்ள சிறிய கருவி. அதன் கொள்ளளவைப் பொறுத்து 2 – 3 மணி நேரம் பயன்படுத்தலாம். சிலிண்டரில் உள்ள ஆக்ஸிஜன் தீர்ந்ததும் அதைப் பயன்படுத்த முடியாது.

யாருக்கெல்லாம் தேவை?

கோவிட் பெருந்தொற்று சூழலில் நோயாளிகளுக்கே ஆக்ஸிஜன் கான்சென்டிரேட்டர், சிலிண்டர் போன்றவை கிடைப்பதில்லை. ஆரோக்கியமானவர்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இந்தக் கருவிகளை மருத்துவர் பரிந்துரையின்றியே வாங்கலாம் என்பதால் பலரும் அதை வாங்க விரும்புகின்றனர். கோவிட் நோயாளிகளிலேயே 90% பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது இல்லை. தேவையற்ற பயத்தினால் இதை வாங்கிப் பயன்படுத்துவதும் பதுக்குவதும் செய்யக் கூடாது.

AP21113418308022 Tamil News Spot
A health worker fixes an oxygen cylinder

Also Read: Fact Check:`சென்னையில் ஆக்ஸிஜன், உணவு இலவசம்!’ – வாட்ஸ்அப்பில் உலவும் தகவல்கள் உண்மையா?

இயற்கையாகவே ஆக்ஸிஜன் கிடைக்க…

சுவாசிக்கும்போது நமக்குத் தேவையான சுத்தமான ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் பணியை நுரையீரலே செய்கிறது. ஒரு நாளைக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி, 15 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்தாலே நம்முடைய நுரையீரல் செயல்திறன் நன்றாக இருக்கும். கருவிகளைத் தேவையின்றி பயன்படுத்தாதீர்கள்” என்கிறார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *