Share on Social Media


அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளில், 60 நாடுகளில், 200-க்கும் மேற்பட்ட உயிரினங்களின் பாதுகாப்புக்காக 7.5 மில்லியன் யூரோக்களைச் செலவு செய்துள்ளது இந்த அறக்கட்டளை. அழியும் நிலையிலுள்ள உயிரினங்களுக்கான மக்கள் அறக்கட்டளை (PTES) மற்றும் அதோடு இணைந்து பணியாற்றக்கூடிய அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள், உலகளவில் அழியும் நிலையிலிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், இவை அனைத்துமே கொரோனா பேரிடர் தொடங்குவதற்கு முன்னர்.

இப்போது, இந்தப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி இல்லாததால், பல காட்டுயிர் பாதுகாப்புத் திட்டங்கள் அப்படியே தேங்கியிருக்கின்றன. இதுமட்டுமன்றி, சூழலியல் சுற்றுலா சமுதாயத்தின் பல்வேறு மக்கள் சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்தது.

காட்டுயிர் / Representational Image

காட்டுயிர் / Representational Image
Pixabay

கடந்த இரண்டு ஆண்டுகளில், அது நிலையற்றுப் போனதால் அதைச் சார்ந்திருந்த மக்களில் சிலர் காட்டுயிர் வேட்டையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இது, ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை மேலும் ஆபத்தில் தள்ளுகிறது.

பி.டி.இ.எஸ் அறக்கட்டளையின் மேலாளர் நிடா அல்-ஃபுலைஜ் (Nida Al-Fulaij), “வாழ்வின் அனைத்துக் கோணங்களிலுமே கோவிட்-19 மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திவிட்டது. மனிதர்களின் ஆரோக்கியம், உலகப் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் பெரும் பின்னடைவைச் சந்திக்கிறோம். அதேநேரம், பூமியில் எளிதில் பாதிக்கக்கூடிய நிலையில் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றியும் நாம் மறந்துவிடக் கூடாது. அலங்கு போன்ற உயிரினங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. நாம் உடனடியாக இதில் செயல்படவில்லையெனில், சூழலியல் சமநிலையில் மிகப்பெரிய குலைவைச் சந்திக்க நேரிடும்” என்று கூறுகிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *