Share on Social Media


தடுப்பூசிகளின் விலை பொதுமக்களை பாதிப்பதில்லை!

இந்த `அமெரிக்க மாதிரி’யில் நாம் கவனிக்க வேண்டிய வேறொரு செய்தியும் இருக்கிறது. தடுப்பூசிகளின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அமெரிக்கச் சந்தையில் புழங்கும் தடுப்பூசிகளில் விலை கூடியது மாடர்னா, ஒரு டோஸ் ரூ. 2400. விலை குறைந்தது ஆஸ்ட்ராஜெனிகா, ரூ. 225. ஆயினும் அமெரிக்காவின் ஒன்றிய அரசே எல்லா மருந்துகளையும் வாங்கி மக்களுக்கு விலையின்றி வழங்குவதால் பொதுமக்களை இந்த விலை வித்தியாசம் பாதிப்பதில்லை.

இந்தியாவில் தடுப்பூசி விலை… மத்திய அரசு செய்தது சரியா?

நம் பிரதமர் ஜூன் மாதம் 7-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் 75% பேருக்கு ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வழங்கும் என்று அறிவித்திருக்கிறார். பலரும் அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள். மீதமுள்ள 25% மக்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பு தனியாரிடம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளே குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும்போது, நாம் அதில் வேற்றுமை பாராட்டுவது முறையாகாது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இந்தியா, அமெரிக்க மாதிரியைப் பின்பற்றுமா?

இந்தியாவால் `கிழக்காசிய மாதிரி’யைக் கைக்கொள்ள முடியவில்லை. காலம் கடந்துவிட்டது. ஆனால் `அமெரிக்க மாதிரி’யைப் பின்பற்ற முடியும். `கிழக்காசிய மாதிரி’யை வெற்றிகரமாக அமல்படுத்திய நாடுகளும்கூடத் தடுப்பூசியை தங்கள் மக்களுக்குச் செலுத்தியே ஆக வேண்டும், அதுவே தீர்வாக அமையும். ஆனால், `கிழக்காசிய மாதிரி’யைப் பின்பற்றியதன் மூலம் அவர்களால் நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது, உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடிந்தது, தடுப்பூசியைச் செலுத்துவதற்கு கால அவகாசம் எடுத்துக் கொள்ள முடிகிறது. நாம் இந்த வாய்ப்புகளை இழந்துவிட்டோம். ஆகவே விரைவாகத் தடுப்பூசிகளைச் செலுத்தியாக வேண்டும்.

இந்த இரண்டாம் அலைக் கொரோனாவில் நோய்ப் பரவலும் உயிர்ப் பலியும் அதிகரித்திருக்கிறது. குறைந்தபட்சம் 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே திரள் எதிர்ப்புசக்தி உருவாகும் என்கிறார்கள் வல்லுநர்கள். 70% மக்கள் என்றால், அதில் செல்வந்தர்களும் இருப்பார்கள், வறியவர்களும் இருப்பார்கள். நகரவாசிகளும் இருப்பார்கள், கிராமத்தினரும் இருப்பார்கள், அசாமியர்களும் இருப்பார்கள், ஆந்திரர்களும் இருப்பார்கள். எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்நாட்டு மக்கள். எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும். அதை ஒன்றிய அரசால் மட்டுமே முன்கை எடுத்துச் செய்ய முடியும். பிரதமர் மோடி மிக தாமதமாக இந்த வழியையே தற்போது தேர்ந்தெடுத்திருக்கிறார். இனியும் இதில் சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல், தேவைப்படும் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி சென்று சேருவதை அவர் உறுதிசெய்தால் மட்டுமே இந்தியாவில் விரைவில் இயல்புநிலை திரும்பும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *