Share on Social Media

கொரோனா வைரஸின் அடுத்தகட்டம் குறித்து அவ்வப்போது வெளியாகும் புதிய தகவல்கள் நம் அச்சத்தை அதிகரிக்கின்றன. பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 90 வயது பெண், ஒரே நேரத்தில் ஆல்பா, பீட்டா என இருவேறுவகையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்ததாக வெளியாகியுள்ள தகவல் சமீபத்திய அதிர்ச்சி.

முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், கணிக்க இயலாத வகையில் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கிறது. புதிதாகக் கண்டறியப்படும் ஒவ்வொரு வேரியன்ட்டும் முன்னதைவிட வீரியம்மிக்கதாகவும், பாதிப்பை அதிகப்படுத்துவதாகவும் இருக்கின்றன. ஸ்பைக் புரோட்டீன், ஆர்.என்.ஏ என ஒவ்வொன்றிலும் தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கும் கொரோனாவின் அடுத்தகட்ட பாய்ச்சல் இரட்டைத் தாக்குதல்.

COVID-19 patient/ Representation Image

COVID-19 patient/ Representation Image
AP Photo / Jae C. Hong

ஆம்! முன்பெல்லாம் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர் ஏதாவதொரு கொரோனா வேரியன்ட்டால்தான் பாதிக்கப்படுவார். இப்போது இரண்டு வேரியன்ட்டுகள் சேர்ந்து ஒருவரைத் தாக்குவது பெல்ஜியத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தைச் சேர்ந்த 90 வயதுப் பெண் தனியாக வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம், நிற்க முடியாமல் மீண்டும் மீண்டும் கீழே விழுந்திருக்கிறார்.

உடனடியாக பெல்ஜியத்தின் ஆல்ஸ்ட் நகரில் அமைந்துள்ள ஓ.எல்.வி (OLV) மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரது சுவாசம் நன்றாக இருந்திருக்கிறது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் சாச்சுரேஷனும் சரியாக இருந்திருக்கிறது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நன்றாக இருந்த அவர் அடுத்த ஐந்து நாள்களில் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்திருக்கிறார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *