Share on Social Media

அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் mRNA – 1273 என்ற தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராகக் கடந்தாண்டில் இருந்து அமெரிக்காவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது பதின்ம வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது.

12 வயது முதல் 17 வயதினரிடையே, இரண்டு டோஸ் போடப்பட்டவர்களுக்கு, இத்தடுப்பூசி 100 சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுவதாக மாடர்னா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Moderna COVID-19 vaccine

Moderna COVID-19 vaccine
AP Photo/Steven Senne

மேலும், “சோதனைகளுக்குப் பிறகு, அரசிடம் ஒப்புதல் பெற்று இதுவரை 3,732 குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டன. முதல் டோஸ் போடப்பட்ட சோதனையின் முடிவில், தடுப்பூசி குழந்தைகளின் உடலில் 93 சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்ட குழந்தைகளிடம் 100 சதவிகிதம் செயலாற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அடுத்தகட்டமாக ஃபைஸர் நிறுவனமும் மாடர்னா நிறுவனமும் 6 மாதம் முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டறியும் பணியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *