Share on Social Media


புதுடில்லி:”கோவா முதல்வராக பொறுப்பேற்றால், கோவா மக்களுக்கு பொற்கால ஆட்சி தருவேன்,” என, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணமுல் காங்.,கில் சமீபத்தில் இணைந்தார். தற்போது கோவாவில் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நம் நாட்டுக்காக 30 ஆண்டுகள் உழைத்துள்ளேன். இப்போது களம் மட்டுமே மாறியுள்ளது.

டென்னிஸ் கோர்ட்டில் இருந்து மக்களின் கோர்ட்டுக்கு இடம் மாறியுள்ளேன்; உழைப்பு தொடர்கிறது. மாநிலம் சந்தித்து வரும் பிரச்னைகளை மக்களிடம் கேட்டறிந்து வருகிறேன். தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்கப்பட்டால் மிகப்பெரிய கவுரவமாக கருதுவேன். முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டால், மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று பொறுப்புடன் ஆட்சி நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியால், கோவா தேர்தலில், திரிணமுல் கட்சியின் முதல்வர் வேட்பாளராக லியாண்டர் பயஸ் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *